யாழ்.பேருந்து நிலைய காணி போதனா வைத்தியசாலைக்காக சுவீகரிக்கப்படப் போகிறது ஜனாதிபதியின் செயலாளர் யாழ்.மாவட்டச் செயலருக்கு கடிதம்!

43395786 Wednesday, January 11th, 2017

யாழ்.போதனா வைத்தியாசலையின் விரிவாக்கத்துக்கு யாழ்.மையப் பேருந்து நிலையக் காணியைச் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலரினால் மாவட்டச் செயலகத்துக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்து

யாழ்.போதனா வைத்தியாலையின் விரிவாக்கத்துக்கு யாழ்.மையப் பேருந்து நிலையம் மற்றும் வைத்தியசாலைக்கும் மையப் பேருந்து நிலையத்துக்கும் இடைப்பட்ட காணி என்பவற்றை பெற்றுத்தருமாறு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினால் ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுளளது ஜனாதிபதியின் செயலரால் வைத்தியசாலை விரிவாக்கத்துக்குச் தேவையான காணிகளைச் சுவீகரித்து அதனைப் பெற்றுக் கொடுப்பதறகு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யாழ். மாவட்டச் செயலகத்துக்ககடிதம் அனுப்பிவைககப்பட்டுள்து.

இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படடவுள்ளதாகத் தெரியவருகிறது.  யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய பிரிவுகளை நகருக்கு வெளிய கொண்டு செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ்.நகரின் மையப் பகுதியில் வைத்தியசாலை விரிவாக்கத்துக்கு காணி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

43395786


உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு!
பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கமாட்டோம் - வடக்கு புகையிரத கடவைக்காப்பாளர் சங்கம் தெரிவிப்பு!
இனவாதம், மதவாதத்தைத் துண்டும் இணையங்களுக்குத் தடை!
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு?