யாழ்.பல்கலைக்கழக மோதல் – ஏழு மாணவர்களுக்கு வழக்கு!

Saturday, September 3rd, 2016

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஏழு மாணவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் இடம்பெற்ற கண்டிய நடனம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொண்டனர். இதில் நான்கு பேர் காயமடைந்திருந்ததுடன், ஒரு மாணவரின் நிலை கவலைக்கிடமாக இருந்த காரணத்தினால் தேசிய மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏழு மாணவர்களுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. யாழ். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிசார் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே குறித்த மோதல் விவகாரம் தொடர்பில் ஏற்கனவே இதே நீதிமன்றத்தில் நான்கு மாணவர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jaffna-uni

Related posts: