யாழ்.பல்கலைக்கழகம் வந்தார் அமைச்சர் சுவாமிநாதன்!

Monday, October 31st, 2016

இன்றையதினம் யாழ் பல்கலை மாணவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தினருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவியலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்ததனால் அவர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கப்பட்டுள்ளமையினால் ஊழியர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது. எனினும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் , மற்றும் பீடாதிபதிகள் பல்கலைக்கழகத்திற்கு உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

uni-suwamy-nathan-2

Related posts: