யாழ். பல்கலைக்கழகத்தில் 5 வருடமாக இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கைநெறியை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

Wednesday, September 20th, 2017

யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி சுமார் 5 வருடங்களாக இடம்பெறவில்லை. ஆனால் கலாநிதி தரத்திலான மூன்று விரிவுரையாளர்கள் விரிவுரைகள் இன்றி வேதனம் பெற்று வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டு வருட கற்கைக்காலத்தைக் கொண்ட உடற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 1998 இல் ஆரம்பிக்கப்பட்டது. இக்கற்கை நெறியில் இணைந்து 250 இற்கம் மேற்பட்ட உடற்கல்வித்துறை சார்ந்த டிப்ளோமா பட்டதாரிகள் வெளியேறி பல்வேறு துறைகளிலும் பிரகாசதத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக கற்கைநெறி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் குறித்த கற்கைநெறிக்கான வேதனம் பெற்ற கலாநிதிகள் மீது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும். இடைநடுவில் கைவிட்பட்ட உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியை மீள ஆரம்பிக்க வேண்டும்.

இதேவேளை, யாழ்பாண பல்கலைகழககத்தில் 2 வருடங்கற்கைநெறி இடம்பெறும் போது, ஏனைய மாகாணங்களில் 9 மாத உடற்கல்வி சான்றிதழ் கற்கை நெறியே இடம் பெற்றது. தற்போது அவை வருட பட்டக் கற்கைத்துறையை ஆரம்பித்துள்ளளன. ஆனால் முதன் முதலில் கற்கை நெறியை ஆரம்பித்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த 5 வருடங்களாக அந்தத்துறை மூடப்பட்டுள்ளது. எனவே கற்கை நெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: