யாழ். சந்திகளில் குவிவு வில்லைகள் பொருத்தல்!

Saturday, March 26th, 2016

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட வீதிச் சந்திகளில் மாநகர சபையால் குவிவு வில்லைகள் பொருத்தும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்தள்ளதாவது –

யாழ்ப்பாண வீதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில்,  விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன சாரதிகள் அவதானிக்கும் வகையில் இந்தக் குவிவு வில்லைகள் பொருத்தப்படுகின்றன.

கே.கே.எஸ் வீதியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீதியும் சந்திக்கும் சந்தி கஸ்தூரியார் வீதியும், கன்னாதிட்டி வீதியும் சந்திக்கும் சந்தி, கஸ்தூரியார் வீதியும் அரசடி வீதியும் சந்திக்கும் சந்தி, கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் சந்தி, மடத்தடி வீதியும் திருக்குடும்ப கன்னியர்மட வீதியும் சந்திக்கும் சந்தி, வேம்படி வீதியும் துரைச்சாமி வீதியும் சந்திக்கும் சந்தி, பருத்தித்துறை வீதியும் பலாலி வீதியும் சந்திக்கும் சந்தி. கே.கே.எஸ் வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் சந்தி ஆகிய இடங்களில் இந்தக் குவிவு வில்லைகள் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: