யாழ் – கொழும்பு பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் அறவிட முடியாது காரைநகர் இ.போ.ச சாலை முகாமையாளர் அறிவிப்பு!

Tuesday, January 10th, 2017

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் பயணிக்கும் இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்துகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக சிறப்புக் கட்டணம் அறவிட்டதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பேருந்து கட்டணம் அவ்வாறு அறவிட முடியாது என்று காரைநகர் சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்த யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் கட்டணத்துக்காக 707ரூபா சிட்டை வழங்கப்படுகிறது. இதற்கு 720ரூபா கொடுத்தாலும் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை. இதற்கு அப்பால் கடந்த 6ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு காரைநகர் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்த ஒன்று பயணித்தது. இதில் பயணிகள் தமக்கான சிட்டைகளைப் பெற்றே பயணித்தனர். பேருந்து அதிவேக நெடுஞ்சாலையை அடைந்த போது பேருந்தினுள் சாரதி மற்றும் நடத்துநருக்கு அப்பால் மூன்றாம் நபர் ஒருவர் நெடுஞ்சாலைப் பயணத்திற்காக ஒரு பயணியிடம் தலா 20ரூபா வீதம் அறவிடுகின்றனர். இதற்கான சிட்டைகளும் வழங்கப்படவில்லை. அதனைக் கேட்டபோதும் நடத்துநர் வழங்கவில்லை. இவ்வாறு நெடுஞ்சாலைக்கான பயண கொடுப்பனவை பயணிகள் தான் சிட்டைப் பணத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டும் என்று நடத்துநர் நிர்பந்திக்கின்றனர்.

20ரூபா பணத்தைப் பிறர் அறவிட இ.போ.ச அனுமதியளித்துள்ளதா, என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர். கொழும்புக்கான பயணத்தில் ஈடுபடும் எந்தப் பேருந்தும் அதிவேகச் சாலையில் பயணிக்க முடியாது. அது தொடர்பில் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுளள்து. ஏனைய வீதிகளில் தடங்கல் அல்லது இடையூறு இருப்பின் சாலையின் அனுமதியுடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியும். அதற்கான கொடுப்பனவை எந்தப் பயணிகளிடமும் அறவிட முடியாது. எனவே பயணிகள் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று காரைநகர் சாலை முகாமையாளர் குணசீலன் தெரிவித்துள்ளார்.

660717495CTB

Related posts: