யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று இடை நிறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி வடமாகாணத்திற்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள பொதுமுகாமையாளர் அறிவித்துள்ளார்.
கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று மூன்று தொடருந்து சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் பெய்த அடைமழை காரணமாக விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையில், வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் பாதையை சீர்செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அப் பணி நிறைவடையும் வரை, பிரதான பாதையிலான தொடருந்து சேவைகள், கொழும்பு கோட்டையிலிருந்து வியாங்கொடை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீனி விலையை கட்டுப்படுத்த விரையில் தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் 45 வழக்குகள் தாக்கல் – யாழ்.மாவட்ட செயலகம் ...
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு - இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
|
|