யாழ்.குடாநாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு: நுகர்வோர் பெரும் சிரமம்!

Tuesday, November 13th, 2018

யாழ் குடாநாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் நுகர்வோர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தற்போது விரதகாலம் ஆகையால் மரக்கறிகளின் விலை உச்சத்துக்குச் சென்றுள்ளன. குறிப்பாக பாவற்காய், பயிற்றங்காய், கத்தரிக்காய், தக்காளிப்பழம் போன்றவற்றின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன.

சந்தை நிலவரப்படி சராசரியாக கத்தரிக்காய் கிலோ 300 ரூபா, பயிற்றங்காய் கிலோ 320 ரூபா, தக்காளிப்பழம் கிலோ 280 ரூபா, பூசணிக்காய் கிலோ 80 ரூபா, பச்சை மிளகாய் கிலோ 300 ரூபா, வெங்காயம் கிலோ 180 ரூபா, கீரை ஒன்று 50 ரூபா என்றவாறாக விற்கப்படுகின்றன.

Related posts:


தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு முதலிடம் வழங்க இந்தியா...
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் வழங்கப்படும்...
ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!