யாழ்ப்பாண நகரில் 250 மில்லியன் செலவில்நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்!

Friday, September 9th, 2016

யாழ்ப்பாண நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையக்  கட்டடத்தொகுதி இன்று வெள்ளிக்கிழமை(09) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

 250 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடம் நவீனமயப்படுத்தப்பட்டதாகும். யாழ்ப்பாணம் புதிய பொலிஸ் நிலையத்தின் கட்டிடம் அங்குரார்ப்பணம்

புதிய பொலிஸ் நிலைய கட்டிட தொகுதியானது 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கட்டிட நிர்மாண பணிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

 இதற்காக 484 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதுடன் புதிய கட்டிடத் தொகுதியில் நிர்வாக பிரிவு, சிறு குற்றப்பிரிவு, குற்றத் தடுப்பு பிரிவு, போக்குவரத்து பிரிவு ஆகியன உள்ளடங்குகின்றன.

download

அத்துடன் 250 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தங்குமிடம், போசன சாலை, நிலைய பொறுப்பதிகாரியின்  உத்தியோக மற்றும் சிரேஸ்ட கட்டளையிடும் அலுவலகர்களுக்கான சுற்றுலா விடுதி இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் சட்டம்,ஒழுங்கு அபிவிருத்தி,மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணநாயக்கா, இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்,நாடாளுமன்ற உறுப்பினர்களான  டக்ளஸ் தேவானந்தா, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

unnamed (2)

unnamed

Related posts: