யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப்  பிரதேசத்தில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு

Saturday, March 12th, 2016

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப்  பிரதேசத்தில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக்  கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரமே  மேற்படி ஹெரோயின்  போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வல்வட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமானாறு அக்கரை கடற்கரைப்  பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை (12-02-2016) காலை 8.30 மணியளவில் இவை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

vvt-heroin-01

Related posts: