யாழ்ப்பாணம் வந்தடைந்தார் ஜனாதிபதி!

Friday, September 9th, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தை வந்தடைந்தார்.

யாழ். மத்திய கல்லூரியின் 200  ஆவது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளதுடன் யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 14232442_10153745150651286_2767683029693789986_n

14199176_10153745150931286_5329456653826169140_n

Related posts: