யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த பேருந்து கிளிநொச்சியில் விபத்து – 23 பேருக்கு காயங்களுடன் கிளிசொச்சி வைத்தியாலையில் அனுமதி!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று (5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் எவருக்கும் பாரிய பாதிப்பு இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாகிஸ்இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு!
பதவியை இராஜனாமா செய்ய வேண்டாம் – மஹிந்தவிடம் ரணில் வேண்டுகோள்!
இ.போ.ச. பேருந்து சேவை சீரின்மை - மன்னார் சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு - பொதுமக்கள் கடும் விசனம்!
|
|