யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 508 வாக்களிப்பு நிலையங்கள் – சுகாதார ஏற்பாடுகளும் சிறப்பாக ஏற்பாடு!

Tuesday, August 4th, 2020

இம்முறை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக, அதற்கு உரிய ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளர்.

வாக்களிப்பு தினமான நாளை புதன்கிழமை காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரையில் வாக்களிக்க முடியும். எனவே வாக்காளர்கள் தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு நேரத்திற்கு சென்ற வாக்களிக்கவும். சுகாதார நடைமுறைளை கடைப்பிடித்து அங்குள்ள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின் பற்றி வாக்குகளை அளிக்க முடியும்.

வாக்களிப்பு அன்றைய தினம் முடிவடைந்த பின் 06ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் 89 வாக்கெண்ணும் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 16 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களும் , 73 மற்றைய வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகள் காலை 07 மணிக்கு ஆரம்பமாகும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: