யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்தும் வாள் வெட்டுக்குழு !

Friday, July 2nd, 2021

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வாள் வெட்டுக்குழுக்கள் தொடர்ச்சியாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை, மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் குழுவொன்று, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவர் மீது தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது.

மேலும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றினை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த 6 பேர் உள்ளடங்கிய குழு, 4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு, கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கி, வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: