யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு!

Saturday, March 23rd, 2019

குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீரென அதிகரித்துச் செல்கின்றன. தற்போதைய வறட்சியான காலநிலை மற்றும் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்றுவரும் நிலையில் வாழைப்பழத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் வாழைப்பழத்தின் விலை தினமும் அதிகரித்துச் செல்கின்றது. கடந்த வாரத்தில் கிலோ 20 ரூபாவாக விற்கப்பட்ட கதலி வாழைப்பழம் தற்போது கிலோ 50 ரூபா வரை அதிகரித்து விற்கப்படுகிறது. இதரை வாழைப்பழமும் தற்போது கிலோ 60 ரூபாவாக விறக்கப்படுகின்றது. நீர்வேலி வாழைக்குலை விற்பனைச் சந்தைக்கு வாழைக்குலையின் வருகை அதிகரித்துக் காணப்படுவதோடு அதன் விலையும் அதிகரித்துள்ளது.

வலி.கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வழைச்செய்கையாளர்கள் கூடுதலாக இந்தச் சந்தைக்கே வாழைக்குலைகளை எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் கூடுதலான வியாபாரிகள் இந்தச்சந்தைக்கு வந்து வாழைக்குலைகளை கொள்வனவு செய்து செல்கின்றனர்.

சந்தை நிலவரப்படி கதலி மற்றும் இதரை வாழப்பழங்கள் இந்தச்சந்தையில் கிலோ நாற்பது ரூபாவாக விற்கப்பட்டன.

வாழைப்பழத்தின் விலை தினமும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வாழைக்குலை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.தற்போதைய வறட்சியான காலநிலை வெப்பம் போன்றவற்றால் வாழைப்பழ நுகர்வும் அதிகரித்துள்ளது.

Related posts: