யாழ்ப்பாணத்தில் வலுவடையும் கொரோனா – இன்று 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது – வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, April 14th, 2020

யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி படைமுகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அரியாலை பகுதியில் சுவிஸ் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக சித்திரை 1ஆம் மற்றும் சித்திரை 3ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளர்கள் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முழங்காவில் கடற்படை முகாமில் இருந்த ஒருதொகுதியினருக்கும் நடத்திய பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: