யாழ்ப்பாணத்தில் மலேரியா பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Thursday, February 17th, 2022

யாழ்ப்பாணத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் நான்கு வாரங்களில் 04 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மலேரியா தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர்  பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.

ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகை தந்த 06 மலேரியா நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: