யாழ்ப்பாணத்தில் பாரிய வெடிப்பு சத்தம் – பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!

Friday, September 11th, 2020

யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத  வெடிபொருட்களை செயலிழக்க  வைக்கும் நடவடிக்கை இன்றுவெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் திடீரென யாழ்ப்பாணத்தில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு காணப்பட்டது.

இந்நிலையிலேயே அராலி இராணுவ முகாம் பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத  வெடிபொருட்களை செயலிழக்க  வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டதாகவும் பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையதேவையில்லை எனவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: