யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர்  யாழ் போதனா வைத்தியசாலையில அனுமதி!

Sunday, October 22nd, 2017

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதானா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உதயபுரம் கொழும்புத்துறையைச் சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் என்ற 27 வயதுடைய இளைஞரே குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: