யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 மீனவர்கள் கைது!

Thursday, July 27th, 2017

அனுமதி அட்டைகள் இன்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 26 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை வீரர்களால் இவர்கள் நேற்றையதினம் பருத்தித்துறை மற்றும் மணற்காடு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய 16 படகுகள், 233 சட்டவிரோத வலைகள் மற்றும் 02 ஜிபிஎஸ் இயந்திரங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், படகுகள் மற்றும் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts: