யாழ்ப்பாணத்தில் கேபிள் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பணம் கொடுத்த மக்கள் அவலத்தில்!

Friday, January 12th, 2018

யாழ்ப்பாணத்தில் உரிய அனுமதிப் பத்திரம் இன்றி நடத்திச் செல்லப்பட்ட கேபிள் தொடர்புகள் சில தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமையநீக்கப்பட்டுள்ளது.  இதனால் கட்டணம் செலுத்திய மக்கள் சிரமத்திற்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் அனைத்து கேபில் நிறுவனங்களும் கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை பதிவு செய்து கொள்ள தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால்காலஅவகாசம் வழங்கப்பட்டது.

மூன்று நிறுவனங்கள் பதிவு செய்யத் தவறியதால் தமது சேவையை இரத்துச் செய்துள்ளது. இதனால் அந்த சேவைகளைப் பெற பணம் அளித்த மக்கள் பெரும் அசௌகரியங்களைஎதிர்நோக்கியுள்ளனர்.  குறிப்பாக இதுவரை அவர்களது பணம் மீளளிக்கப்படவில்லை.

Related posts: