யாழ்ப்பாணத்தில் கடந்த 2 நாட்களில் 6 பேர் கொரோனாவால் மரணம் – தொற்றாளர் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது!
Wednesday, June 30th, 2021யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் வயோதிபர் ஒருவரும், நயீனாதீவை சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில் நேற்றய தினம் 2 பேர் மரணித்திருக்கின்றனர்.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்மை குறிப்பிடத்தக்கது.
இதனிடையேயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து291ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 57 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களில் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 471 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க
நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 21 ஆண்களும் 24 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு மூவாயிரத்தைக் கடந்து மூவாயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|