யாழில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வீடுகளற்ற நிலையில் – யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள்!

Saturday, May 25th, 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

அவர்களுக்கு தற்போது 10 இலட்ச ரூபாய் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4 ஆயிரத்து 693 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களிற்குள் அதி கூடிய தேவை உடைய தொகை இதுவாகும்.

அதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 113 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. இது குறைந்தளவு தொகையாகும். நிதி மூலங்கள் கிடைக்கும் பட்சத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் பணிகளை முன்னெடுக்க முடியும்.

யாழ்.மாவட்டத்தில் வீடுகள், காணிகள் இல்லாமல் அதிகளவானோர் வாழ்கின்றனர். அதில் காணிகள் இருந்தும் வீடுகள் இல்லாதோர் தொகை அதிகமாக உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: