யாழில். வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிப்பு – தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தெரிவிப்பு!

Friday, April 21st, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் சுமார் ஐந்தாயிரம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 75 வீதமான தென்னைகளுக்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை ஈ தாக்கமானது இந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதி பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அந்த நோய் தாக்கம் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவியுள்ளது.

தொடர்ச்சியாக இந்த வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த வெள்ளை ஈ தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாடசாலை நேரத்திற்கு மேலதிகமான ஆசிரியர்களை வேலை வாங்கும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை என்கிறது இலங்...
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - கனமழைக்கும் வாய்ப்புள்ளதென புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமு...
தரம் குறைந்த எரிபொருள் சந்தையில் விநியோகம் – உண்மைக்கு புறம்பானதென மறுக்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர...