யாழில் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது!

Monday, February 6th, 2017

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் கத்தி மற்றும் வாள் போன்றவற்றை செய்துகொடுத்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Jaffna3

Related posts: