யாழில் வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் – பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
Thursday, December 13th, 2018துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட திருடன் ஒருவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
யாழ் பிறவுண் வீதியிலுள்ள வீடொன்றில் துவிச்சக்கர வண்டியை திருடிய திருடன் ஒருவரை அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமரா மூலம் வீட்டின் உரிமையாளர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த வீடியோவை தெரிந்தவர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் இந்த வீடியோவைப் பார்த்த ஒருவர் நேற்று அரசடி வீதியில் சந்தேகநபர் துவிச்சக்கர வண்டியில் வருவதனைக் கண்டு வீட்டின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.
இதனால் சாதுரியமாகச் செயற்பட்ட வீட்டின் உரிமையாளர் மேற்படி திருடனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணையை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|