யாழில் கற்றாளை பிடுங்கிய இருவர் கைது!

Tuesday, June 18th, 2019

மண்கும்பானில் சட்டவிரோதமான முறையில் கற்றாளைகளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கற்றாளைகள் பிடுங்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: