யாழில் ஐந்து பேர் கைது!

Tuesday, July 9th, 2019

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வாளர் உட்பட ஐந்து பேர் யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 11 மில்லி கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது ஈச்சமோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இவர்கள் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விசாணையின் பின் அவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts: