மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளை வழமைக்கு திரும்பும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Tuesday, November 10th, 2020

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மீண்டும் நாளைமுதல்(11)  வழமைக்குத் திரும்பவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், நாளைமுதல் சேவைகள் ஆரம்பமாகும் எனவும் குறைந்த அளவிலான ஊழியர்களே பணியாற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: