மோட்டார் சைக்கிளுடன் சென்ற வாகனம் தடம்புரண்டது!

Tuesday, October 9th, 2018

மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளை ஏற்றிச்சென்ற வாகனமே விபத்திற்குள்ளானது.

இதன்போது சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் காயங்கள் எதுவுமின்றி தெய்வாதினமாக தப்பியுள்ளனர்.

இருப்பினும் குறித்த வாகனம் மற்றும் அதில் ஏற்றிவரப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் சேதமடைந்த நிலையில் சொத்துசேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: