மே 7 பொது விடுமுறை!

Saturday, March 31st, 2018

சாவதேச தொழிலாளர் தினம் மே 1 ஆம் திகதிக்குப் பதிலாக மே 7 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினத்தை அரசு விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது .இது தொடர்பிலான கோரிக்கை அறிக்ககையை தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பியுள்ளது . இது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.என். சில்வா தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கேரிக்கையின் பிரகாரம் மே மாதம் 7 ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்

வெசாக் வாரத்தை முன்னிட்டு சாவதேச தொழிலாழர் தினக் கொண்டாட்டங்களை மே 7 ஆம் திகதி பிற்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: