மே 03 ஆம் திகதி வரை தனியார் வகுப்புகள் இடைநிறுத்தம்!

Monday, April 29th, 2019

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவந்த தனியார் வகுப்புகளை, மே மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்த அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், தனியார் வகுப்புகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், தனியார் வகுப்பு ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள் சங்கத்தின் காலி மாட்ட சங்கத் தலைவர் நந்தன யு கமகே தெரிவித்துள்ளார்.

தனியார் வகுப்புகள் அனைத்தும், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: