மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மொத்த பாதிப்பு 27,000ஐ கடந்தது!

இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 319 பேர் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 182 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 652 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 20 ஆயிரத்து 90 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 840 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு!
13இலட்சத்து 80ஆயிரம் ரூபா காசோலை மோசடி நபர் கைது!
செல்வச்சந்நிதி மஹோற்சவ காலத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் - பருத்தித்துறை பிரதேச செயலர் !
|
|