மேலும் 31 அகதிகள் வியாழனன்று நாடு திரும்பவுள்ளனர்!

Tuesday, May 17th, 2016
தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இலங்கை அகதிகள் 31 பேர் எதிர்வரும் வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு திரும்பும் அகதிகளுள் 18 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் திருகோணமலை,மன்னார் முல்லைத்தீவு,பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி தெரிவித்தார்.

அத்துடன் நாடுதிரும்பும் அகதிகளுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பண நன்கொடைகளும் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவிலுருந்து நாடு திரும்பி மீள்குடியமரும் அகதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் 65,000 வீட்டுத் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படுமென மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி கூறினார்.

இலங்கை திரும்பும் அகதிகளுள் வீடுகள் மற்றும் தமது உறவினர்களை இழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நட்ட ஈடுகளை வழங்குமாறும் கைத்தொழில்களையும் புனரமைப்பு செய்யுமாறு அதிகாரசபைக்கு அறிவுரைகளை வழங்கியதாக அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts: