மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
Sunday, December 6th, 2020கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த அனைவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதன்படி டுபாயிலிருந்து இரு விமானங்கள் மூலமாக 169 பேரும் கட்டாரிலிருந்து 41 பேரும் அவுஸ்ரேலியாவின் சிட்னியிலிருந்து 38 பேரும் ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 50 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணகளும் கொழும்பில் உள்ள பல தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
101 கிலோ ஹெரோயினுடன் பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் கைது…!
நான்காம் மாடிக்கு மேல் கட்டடம் நிறுவ அனுமதியளிக்க யாழ்ப்பாண மாநகர சபைக்கு அதிகாரம் கிடையாது !
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியைக் கோருங்கள்: ஜனாதிபதியிடம் அரச மருத்...
|
|