மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, August 30th, 2021

இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பைஸர் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து கட்டார் எயார்வேஸ் மூலம் 815 கிலோ எடையுள்ள குறித்த தடுப்பூசி தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

இதேவேளை நாளையதினம் 15 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடடுப்பூசியின் மேலும் ஒரு தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: