மேயரின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து சபையில் ஈ.பி.டி.பி விவாதம்!

Thursday, November 15th, 2018

யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த நியமனமானாலும் அதை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்து சபையின் அனுமதியுடனேயே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது முதல்வர் ஆர்னோல்ட் தனது தேவைகளுக்காக இரண்டு உதவியாளர்களை நியமித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்போதே குறித்த நியமனம் தவறானதெனவும் இதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையால் முதல்வருக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

Related posts: