மூன்று குடும்பங்களின் தேவைகளுக்காக 200 குடும்பங்களுடன் விளையாடாதீர்கள் – பூநகரி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர் சங்க செயலாளர் வலியுறுத்து!

Tuesday, December 6th, 2022

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை அளிப்பதாக பூநகரி சிறீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மேலதிக வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக கடலட்டைப் பண்ணைகளை கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 203 உறுப்பினர்களை விண்ணப்பித்து விட்டுக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காகவும் குறுகிய நலனுக்காகவும் கடலட்டைப் பண்ணைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

சுமார் 266 கடற்றொழிலார்களை உறுப்பினர்களாக கொண்ட கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்கத்தினால், நக்டா திணைக்களத்திற்கு 174 உறுப்பினர்களின் கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் நக்டா நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. கிராஞ்சியில் வெளியாருக்கு அட்டை பண்ணை வழங்கப்படவில்லை அவ்வாறு வழங்கப்பட்டால் அதை நாம் எதிர்ப்போம்.

ஆனால் கிராஞ்சியில் போராட்டம் நடத்துபவர்கள் பிணாமிகளின் பெயரில் பண்ணைகளை அமைத்துவிட்டு பண்ணை வேண்டாம் எனப் போராடுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள் - முச்சக்கர வண்டி சாரதிகளிடம...
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் : தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை...
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை...