மூடப்பட்ட பாடசாலைகள் 05ஆம் திகதி மீளவும் திறப்பு!

அனர்த்த நிலமை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் இம்மாதம் 05ஆம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் 39 பாடசாலைகளும் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளே அன்றைய தினம் திறக்கப்பட உள்ளன. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் இடம்பெயர் முகாம்களாக பயன்படுத்தப்படுகின்ற 15 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள், தென் மாகாணத்தில் இடம்பெயர் முகாம்களாக பயன்படுத்தப்படுகின்ற 10 பாடசாலைகளும் சேதம் ஏற்பட்டுள்ள 29 பாடசாலைகளும் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் அன்றைய தினம் திறக்கப்பட உள்ளன.
இதேவேளை இடம்பெயர் முகாம்களுக்காக முழுமையாக பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகள் மற்றும் பகுதியளவில் பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்குறிய அதிகாரம் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|