முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் – விரைந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022

முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

அத்தோடு கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ரேஷன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைந்து செயற்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த வேலைத்திட்டம் தொடர்பாக போக்குவரத்துதுறை தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: