முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் கடற்தொழிலுபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, July 2nd, 2018

வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான இம்மாதத்திற்குரிய மாதாந்தக் கொடுப்பனவையும் செல்வக்குமார் ஸ்ராலின் என்ற முன்னாள் போராளிக்கு வழங்கிவைத்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற உள்ளாந்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு மக்களுடன் இணைக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் மிக வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

யாழ் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது பங்களிப்பை ஓரளவேனும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது சபையில் எற்றுக்கொள்ளப்படாதிருக்கும் நிலையில் சுயதொழிலுக்கான உபகரணங்கள் இன்றி தமது குடும்பத்தை கொண்டு செல்லமுடியாத நிலையில் வாழ்ந்துவந்  செல்வக்குமார் ஸ்ராலின் என்ற  முன்னாள் போராளி ஒருவருக்கு கடற்றொழில் செய்வதற்கான பொருட்களை தனது இம்மாதக் கொடுப்பனவில் கொள்முதல் செய்து றெமீடியஸ் வழங்கிவைத்துள்ளார்.

இது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் கூறுகையில் –

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போராளிகளின் தற்போதைய வாழ்வியல் நிலைமை தொடர்பில் எதுவிதமான நடவடிக்கைகளையும் பெற்றுக்கொடுக்காதுள்ளனர். அத்துடன் முன்னாள் போராளிகள் பலர் இன்று வீதிகளில் கையேந்து நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்நிலையில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது எண்ணக்கருவான மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்றதன் அடிப்படையில் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழும் வறிய முன்னாள் போராளிகளுக்கு எனது மாதாந்தக் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் வழங்கிவருகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

36498320_1827496750622737_349723196750036992_n

Related posts: