முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலுப்பிள்ளைக்கு நினைவுச்சிலை அமைக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Tuesday, August 21st, 2018

கோப்பாய் தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர். கதிரவேலுப்பிள்ளை அவர்களது சேவையை கருத்தில் கொண்டு அவரக்கு மரியாதை அளிக்கம் வகையில் நினைவுச் சிலை அமைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 5 வது கூட்டத்தொடர் இன்றையதினம் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அமரர் கதிரவேலுப்பிள்ளை சேவைக்காலத்திலே பல குடியேற்ற கிராமங்களை உருவாக்கி, பல வீட்டுத்திட்டங்களையும் ஏனைய புனரமைப்பு வேலைகளையும் மக்களுக்காக செய்து கொடுத்திருக்கின்றார்.

ஆகவே அவரை கௌரவிக்கும் முகமாக அவருடைய உருவச்சிலை ஒன்றினை வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் புனரமைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அதேபோல முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்து, மரணித்த அனைவருக்கும் நினைவிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அவர்கள் விட்டுச்சென்ற பாதையிலே நாங்கள் இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் செய்த தியாகத்தினை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. ஆகவே இதற்கான குழுவும் அமைக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: