முன்னாள் ஜனாதிபதியின் தங்கை காலமானார்!
Monday, May 8th, 2017முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தங்கையான காந்தினி சித்ராணி ராஜபக்ஸ ரணவக்க மரணமடைந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். இவர் தனது 60ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவரது பூதவுடல் நுகேகொட – எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவரின் இறுதிக் கிரியை நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ராஜபக்ஸ குடும்பத்தில் காந்தினி சித்ராணி ராஜபக்ஸ ரணவக்க இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலைதீவு தொடர்பான முன்மொழிவை வரவேற்றுள்ள இலங்கை !
பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது - சட்...
2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுபீட்ச சுட்டெண்ணில் வீழ்ச்சி!
|
|