முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்யுங்கள் – கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கோரிக்கை!

Tuesday, April 21st, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்தும் அதனை தடுக்கத்தவறிய குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி எதிர்கொண்டுள்ள நிலையில் கர்தினால் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகிற நிலையில் அதனை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்தத் தாக்குதல்களினால் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு இதனை நடத்தியவர்கள் பற்றிய முழுமையாக தகவல்கள் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

Related posts: