முதல் தடவையாக நாளொன்றில் 200 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு – மொத்த எண்ணிக்கையும் 8 ஆயிரத்தைக் கடந்தது!

Friday, August 27th, 2021

கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் 209 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில், நாளொன்றில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை முதல் தடவையாக 200 ஐ கடந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கொவிட் மரணங்கள் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறுதியாக பதிவான 209 மரணங்களையடுத்து, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிழரத்து 157ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: