முட்டையின் விலை சடுதியாக உயர்வு – , கால்நடை தீவன பொருட்களின் விலையை குறைக்க அரசு தலையிட்டால் விலையை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Monday, August 17th, 2020

இலங்கை சந்தைகளில் முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன்று சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை 22 முதல் 24 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் தொடங்கிய மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு முட்டையின் சில்லறை விலை 18 ரூபா முதல் 20 ரூபா வரை இருந்தது.

பின்னர் அரசாங்கம் ஒரு முட்டையின் சில்லறை விலையை 10 ரூபாவாக குறைத்தது. எனினும், முட்டைகளின் விலை ஏப்ரல் மாதத்தில் 15 ரூபா, மே மாதத்தில் 17 ரூபா, ஜூன் மாதத்தில் 18 ரூபா மற்றும் ஜூலை மாதம் 20 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சில பகுதிகளில் ஒரு முட்டையின் விலை 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் தினசரி முட்டை நுகர்வு சுமார் 8.5 மில்லியனாக உள்ளது, தற்போது அது சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து, கோழி வளர்ப்பு குறைந்து வருவதும், விலங்குகளின் தீவனத்திற்கு அரிசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதும் முட்டை விலையின் அதிகரிப்புக்கு காரணமாகும்.

எவ்வாறாயினும், கால்நடை தீவன பொருட்களின் விலையை குறைக்க அரசு தலையிட்டால் முட்டைகளின் விலையை குறைக்க முடியும் என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: