முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரம் : வயதெல்லையை உயர்த்துமாறு  கோரிக்கை!

Saturday, June 4th, 2016

முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரத்தின் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் ரி.ஆர்.ஆர். பள்ளி தெரிவித்துள்ளார்.

சொந்த தேவைகளுக்கு இன்றி வருமானத்திற்காக முச்சக்கர வண்டிகளை செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களின் வயதெல்லையே இவ்வாறு உயர்த்தப்பட வேண்டுமென இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான யோசனையை வீதி பாதுகாப்பு சபையிடம் தாம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த யோசனை தொடர்பில் வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவிக்கையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை போக்குவரத்து அமைச்சரிடம் முன்வைத்து இதற்கான தீர்வினை விரைவில் பெற்றுத்தர எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts:

வடக்கின் அபிவிருத்தியை எமது அரசாங்கம் மிக ஆர்வமாக முன்னெடுக்கின்றது - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு - இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் அதிகமானோர் க...
அரசாங்க ஊழியர்களுக்கு திட்டமிட்டபடி சம்பளம் வழங்கப்படும் - வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நித...