மீனவர்களின் மேம்பாடு கருதி களப்புப் பகுதிகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் களப்பு பகுதிகளில் தொழில் புரியும் மீனவர்களின் மேம்பாடு கருதி 10 லட்சம் ரூபா பெறுமதியிலான இறால் மற்றும் மீன் குஞ்சுகள் விடப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் தெரிவிக்கின்றது.
திணைக்களத்தின் களப்பு அபிவிருத்தி திட்டத்தின் நாயாறு களப்பு பகுதியிலேயே இவ்வாறு 8 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. அதேபோன்று களப்பினை அண்டிய பகுதிகளில் 80 ஆயிரம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டன.
விடப்பட்ட மீன் குஞ்சுகளின் பெறுமதி தலா 2 ரூபா வீதம் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவும் இறால் குஞ்சுகள் ஒரு ரூபா வீதம் 8 லட்சம் ரூபா பெறுமதியினையுடையவை.
தற்போது களப்பு பகுதியில் விடப்படும் இறால் குஞ்சுகளும் மீன் குஞ்சுகளும் 3 மாத காலத்தில் அதன் வளர்ச்சியை எட்டிவிடும். அப்போது 3 மீன்கள் ஒரு கிலோ எடையை எட்டும். அதன் மூலம் சிறு மீன்பிடியாளர்கள் நன்மை அடைவார்கள்.
இவ்வாறே இறாலும் 3 மாத காலத்தில் வளர்ச்சி அடைந்ததும் அவற்றில் இருந்து சுமார் 15 ஆயிரம் இறால் உற்பத்தியினை எட்ட முடியும். அவற்றின் மூலம் இறால் பிடிப்பவர்களும் வருமானம் ஈட்டமுடியும். எனத் தெரிவித்தனர்.
Related posts:
|
|