மீண்டும் நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் பணி நிறுத்தம்!

Thursday, January 18th, 2018

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தைஆரம்பித்துள்ளனர்.

மின்சார சபையின் தலைவரை சில ஊழியர்கள் தடுத்து வைத்து தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்.

இதேவேளை தமது ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டமையை கண்டித்து மின்சார சபை ஊழியர்கள் நாடளாவிய ரீதியில்பணி நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related posts:

இலங்கைப்  பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் சி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவ...
மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான வரைவை இறுதி செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் -...