மீட்கப்பட்ட உடல்பாகங்ககளை டீ.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த உத்தரவு!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட 26 மனித உடல் பாகங்கள் அனைத்தையும் டீ.என்.ஏ சோதனைக்கு உட்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில்,தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் பல உடற்பாகங்களை குறித்த கல்லூரியில் இருந்து மீட்டுள்ளனர்.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட12 பேர் தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுநிராகரித்துள்ளது.
இலங்கை மருத்து சங்கத்தில் இணைவதற்காக இரண்டு மாணவர்களுக்காக குறித்த மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பில் குறித்த மாணவர்கள் இருவருக்கும் கல்லூரியில் அனுமதி வழங்குமாறு அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் 12 பேர்வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும்,இந்த கோரிக்கையை மேன் முறையீட்டு நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.இந்த வழக்கு அடுத்த மாதம் 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனநீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|